/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெருநாய்கள் தொல்லை...தீர்வே இல்லை...
/
தெருநாய்கள் தொல்லை...தீர்வே இல்லை...
ADDED : நவ 24, 2025 06:26 AM

வீணாகும் குடிநீர் கணபதி, 40வது வார்டு, சுபாஷ் நகர் பகுதியில், சில இடங்களில் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. பெருமளவு தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. குழாய் உடைப்பால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, சாலையும் சேறும், சகதியுமாக உள்ளது.
- ஹோமந்தன்: கடும் துர்நாற்றம் மேட்டுப்பாளையம், பழைய நகராட்சி அலுவலகம் பின்புறம் மார்க்கெட் வீதியில், ஹோட்டல் கழிவுகள், கழிவு நீரை சாக்கடையில் விடுகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடையில் கழிவுநீரை கலக்க விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தங்கபாண்டி: பழுதான தெருவிளக்கு டவுன்ஹால், 81வது வார்டு, கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு கடந்த சில வாரங்களாக எரியவில்லை. கடும் இருள் காரணமாக இரவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பழுதான தெருவிளக்கை சரி செய்துதர வேண்டும்.
- கார்த்திக்: மிரட்டும் நாய்கள் ஜி.என்.மில்ஸ், பாரதி ரோடு, என்.பி.சி., நகர், எஸ்.எம்.ஆர்., லே -அவுட் ஆகிய தெருக்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துக்கொண்டே போகிறது. வண்டியில் செல்பவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. வீட்டை விட்டு வெளியேறவே பெரும் அச்சமாக உள்ளது.
- கீர்த்திக்கா: விபத்து அபாயம் மேட்டுப்பாளையம் ரோடு, எரு கம்பெனி பேருந்து நிறுத்தம், பி.ஆர்.ஜே., மருத்துவமனை எதிரில், சாலை நடுவே உள்ள இரும்பு தடுப்புகள் உடைந்துள்ளன. கம்பிகள் வளைந்து சாலையில் நீட்டிக்கொண்டுள்ளது. இதனால், சாலையோரம் செல்லும் வாகனஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.
- சங்கர்: தொற்றுநோய் அபாயம் சி ங்காநல்லுார், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி, கருணாநிதி நகர், நான்காவது வீதியில், பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதனால், சாக்கடை கால்வாயில் மண் அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் சுத்தம் செய்ய வேண்டும்.
- ரவீந்திரன்: திறப்பதில் தாமதம் அவிநாசி ரோட்டில், கொடிசியா செல்லும் வழியில், 24வது வார்டில், மாநகராட்சி சார்பில் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டது. கட்டடம் கட்டி ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை கழிப்பிடத்தை திறக்க வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.
- பாலு: போக்குவரத்து நெருக்கடி மரப்பாலம் ரயில்வே மேம்பால பணியால் கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் மதுக்கரை ரோட்டில் திருப்பி விடப்படுகின்றன. இந்நிலையில், நடராஜ் மருத்துவமனை மற்றும் அடுத்துள்ள சுரங்கப்பாதை அருகே காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வரிசையாக வராமல் எதிர் திசையில் முந்த முயலும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
- கார்த்திக்: பூங்காவில் சுற்றும் நாய்கள் காந்தி பூங்காவில் காலை, மாலை வேளையில் அதிகம் பேர் நடைப்பயிற்சி செல்கின்றனர். குழந்தைகள் மாலை நேரங்களில் பூங்காவினுள் விளையாடுகின்றனர். இந்நிலையில், பூங்காவில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. நடைப்பயிற்சிக்கு செல்வோர், குழந்தைகளை நாய்கள் தாக்கும் சம்பவங்கள் நடக்கிறது.
- கார்முகிலன்: வாகனங்களை மறைக்கும் புதர் வெள்ளலுார், ரயில்வே சுரங்கப்பாதை வழியில் சாலையின் இருபுறங்களில் புதர்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லவே மிகவும் சிரமமாக உள்ளது. எதிர்வரும் வாகனங்களும் தெரிவதில்லை. வாகனஓட்டிகளுக்கு ஆபத்தாக உள்ள புதரை அகற்ற வேண்டும்.
- பாரதி:

