/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விரட்டும் தெருநாய்கள்; மடியும் ஆடுகள்
/
விரட்டும் தெருநாய்கள்; மடியும் ஆடுகள்
ADDED : ஏப் 28, 2025 11:02 PM

குடிமங்கலம், ; கோட்டமங்கலம் ஊராட்சியில் தெருநாய்கள், கால்நடைகளை தொடர்ந்து தாக்குவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், கோட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வரதராஜபுரம், வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், குமாரபாளையம், முருங்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது.
சமீபகாலமாக, விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் பராமரிக்கப்படும் கால்நடைகளை தெருநாய்கள் தாக்குவது அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் வரதராஜபுரம் கிராமத்தில், தெருநாய்கள் கடித்ததில், தாயம்மாள் என்பவருக்கு சொந்தமான 6 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிராம மக்கள் கூறியதாவது: கோட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் இறைச்சிக்கழிவுளை திறந்தவெளியில் வீசுகின்றனர். அக்கழிவுகளை உண்ணும் தெருநாய்கள், பிற நாட்களில், கால்நடைகளையும், மனிதர்களையும் தாக்குகின்றன.
இதை கட்டுப்படுத்த, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.