/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகலிலும் ஒளிரும் தெருவிளக்கு; தொழில்நுட்ப கோளாறால் சிக்கல்
/
பகலிலும் ஒளிரும் தெருவிளக்கு; தொழில்நுட்ப கோளாறால் சிக்கல்
பகலிலும் ஒளிரும் தெருவிளக்கு; தொழில்நுட்ப கோளாறால் சிக்கல்
பகலிலும் ஒளிரும் தெருவிளக்கு; தொழில்நுட்ப கோளாறால் சிக்கல்
ADDED : செப் 16, 2025 10:06 PM

வால்பாறை; வால்பாறை, அண்ணாநகரில் பகல் நேரத்திலும் எரியும் தெருவிளக்குகளால், மின்சாரம் வீணாகிறது.
வால்பாறை மலைப்பகுதியில், நகராட்சி சார்பில் எஸ்டேட் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தெருவிளக்குகள், உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தெருவிளக்குகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை அண்ணாநகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக, இரவு பகலாக தெருவிளக்குகள் அணையாமல் எரிகின்றன. மின்விளக்குகளை அணைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மின்சாரம் வீணாகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில், தெருவிளக்குகளை கூட முறையாக பராமரிப்பதில்லை. கடந்த வாரம் முழுவதிலும் அண்ணாநகரில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரியவில்லை. புகார் தெரிவித்த பின் சரி செய்தனர்.
தற்போது, 24 மணி நேரமும் தெருவிளக்குகள் எரிகின்றன. இதனால், மின்சாரம் வீணாகிறது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தெருவிளக்குகளுக்கு 'எலக்ரானிக்' முறையில் 'டைமிங்' வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால் தெருவிளக்குகள் அணையாமல் எரிகிறது. இதை சரி செய்ய தொழில்நுட்ப பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்கப்படும்,' என்றனர்.