தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விடுதிகள் இருந்தும் தங்க முடியாமல் மாணவர்கள் அவஸ்தை! கடந்த ஆட்சியின் அலட்சியமே காரணம்

விடுதிகள் இருந்தும் தங்க முடியாமல் மாணவர்கள் அவஸ்தை! கடந்த ஆட்சியின் அலட்சியமே காரணம்

விடுதிகள் இருந்தும் தங்க முடியாமல் மாணவர்கள் அவஸ்தை! கடந்த ஆட்சியின் அலட்சியமே காரணம்


UPDATED : ஆக 05, 2026 06:23 AM

ADDED : ஆக 04, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 06:23 AM ADDED : ஆக 04, 2026 04:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சமூக நீதி விடுதிகள், கட்டிட வரைப்படம் மற்றும் டி.டி.சி.பி. அனுமதி பெறப்படாததால் மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பாலசுந்தரம் ரோடு மற்றும் சுங்கம் பகுதிகளில் தலா 250 மாணவர்கள் தங்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் கட்டப்பட்டன. இதற்கான கட்டுமானப் பணிகளை 2023ல் தாட்கோ தொடங்கியது. பாலசுந்தரம் ரோட்டில் ரூ.14.87 கோடி மதிப்பில் கட்டப்பட்ட விடுதியும், சுங்கம் பகுதியில் கட்டப்பட்ட விடுதியும் 2025 அக்டோபரில் திறந்து வைக்கப்பட்டன.

ஆனால், திறந்து வைக்கப்பட்டு எட்டு மாதங்கள் கடந்தும், இரண்டு விடுதிகளும் மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனினும், ராமநாதபுரம், தேனி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சிவகங்கை போன்ற பல மாவட்டங்களில் இருந்து சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர்ந்துள்ள இந்த மாணவர்கள் தங்குவதற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். கட்டிடத்திற்கான பிளான் மற்றும் டி.டி.சி.பி., அனுமதி சான்றிதழ்களை அதிகாரிகள் முன்கூட்டியே பெற தவறியதால், புதிய விடுதிகள் இதுவரை திறக்கப்படவில்லை.

அதிக பணம் கொடுத்து அறைகள் எடுத்து தங்க முடியாமல், கல்லுாரிக்கு விடுப்பு எடுத்து சொந்த ஊர்களுக்கு மாணவர்கள் சென்றுள்ளனர். சிலர் வேறு வழியின்றி நண்பர்களின் அறைகளில் போதிய வசதிகளின்றி சிரமத்துடன் தங்கி வருகின்றனர்.

அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கும் விஸ்வராஜராஜன் கூறுகையில், ''வெளியில் பணம் கொடுத்துத் தங்க முடியாத நிலையில்தான் விடுதிக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எப்போது திறப்பார்கள் எனக் கேட்டால் அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை,'' என்றார்.

மற்றொரு மாணவர் ராகவன், ''வீட்டிலும் பணம் கேட்க முடியாத சூழலில் வெளியில் தங்கியுள்ளேன். விடுதி தொலைபேசி எண்ணிற்கு அழைத்தாலும் சரியான தகவல் கிடைப்பதில்லை. எனவே, உடனே விடுதியைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தெரிவித்தார்.

Image 1605849

நடவடிக்கை



அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மாநகராட்சி அப்ரூவல் கிடைத்துவிட்டது. மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புப் பணிகளும் நிறைவடைந்து விடுதிகள் தயார் நிலையில் உள்ளன. பிளான் மற்றும் டி.டி.சி.பி. அனுமதி ஓரிரு நாளில் கிடைத்துவிடும். இந்த வார இறுதிக்குள் விடுதிகளைத் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றனர்.

கட்டடம் கட்டத் திட்டமிடும்போதே அரசு அதிகாரிகள் உரிய அனுமதி பெறாமல் அலட்சியமாக இருந்ததே இந்த சிக்கலுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இனிவரும் காலங்களிலாவது அரசு துறைகள் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us