பண்ணாரி அம்மன் கல்லூரியில் மாணவர் அறிமுக நிகழ்ச்சி
பண்ணாரி அம்மன் கல்லூரியில் மாணவர் அறிமுக நிகழ்ச்சி
ADDED : செப் 04, 2026 08:39 AM

அ நிறம் | அளவு
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமி முன்னிலை வகித்தார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் கவுதம் பேசுகையில்,''ஒழுக்கம், நேர்மை, பொறுப்புணர்வு, சமூக அக்கறையுடன் செயல்பட்டு, கல்வியை சமூக நலனுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
