ADDED : செப் 24, 2026 07:55 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தாமரைக்குளம் அருகே பைக் மீது கார் மோதியதில், வேலுாரை சேர்ந்த கல்லுாரி மாணவர் இறந்தார்.
சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம்., மூன்றாம் ஆண்டு படித்த
வேலூரை சேர்ந்த மாணவர் உதயநாதன், 19. கல்லூரி நண்பர்களான தர்மபுரியை
சேர்ந்த சஞ்சீவ், 19, சந்தோஷ் குமார், 19, ஆம்பூரை சேர்ந்த ஆல்வின்ஜாபஸ்,
21, ஆகியோருடன் கடந்த, 21ம் தேதி இரண்டு பைக்குகளில் வால்பாறைக்கு சுற்றுலா
வந்தனர்.
இவர்கள், 22ம் தேதி இரவு, பொள்ளாச்சியில் இருந்து
கோவைக்கு உதயநாதன் ஓட்டிய பைக்கில் ஆல்வின்ஜாபஸ் அமர்ந்தும், மற்றொரு
பைக்கை சந்தோஷ்குமார் ஓட்ட சஞ்சீவ் அமர்ந்தும் வந்தனர்.
தாமரைக்குளம் அருகே, நெகமத்தை சேர்ந்த மகேந்திரன், 22, என்பவர் ஓட்டி வந்த கார், இரு பைக்குகள் மீதும் மோதியது.
விபத்தில், படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர்கள், உதயநாதன்
இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரிக்கின்றனர்.
