/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி பங்கேற்க தயாராகும் மாணவி
/
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி பங்கேற்க தயாராகும் மாணவி
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி பங்கேற்க தயாராகும் மாணவி
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி பங்கேற்க தயாராகும் மாணவி
ADDED : அக் 23, 2025 11:34 PM

கோவை: தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு, அவிலா கான்வென்ட் பள்ளி மாணவி தேர்வு பெற்றுள்ளார்.
இந்திய பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில், மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.கோவை அவிலா கான்வென்ட் பள்ளியை சேர்ந்த, 17 வயதுக்கு உட்பட மாணவியர் பிரிவில் பங்கேற்ற வர்னிகா, 400க்கு 395 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். இவர், டிச. மாதம் 6 முதல் 9ம் தேதி வரை, மத்திய பிரதேசம் இந்துாரில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளார்.
வர்னிகாவுக்கு தலைமை ஆசிரியர் பிரியா ரோஸ், உடற்கல்வி ஆசிரியர் உமா மகேஸ்வரி வாழ்த்து தெரிவித்தனர்.