/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிராக் சைக்கிளிங்' போட்டி வெண்கலம் வென்ற மாணவி
/
'டிராக் சைக்கிளிங்' போட்டி வெண்கலம் வென்ற மாணவி
ADDED : டிச 04, 2025 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அகில இந்திய பல்கலைகளின்சங்கங்கள் சார்பில், 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது.
தமிழகத்தில் இருந்து மட்டும் அண்ணா பல்கலை, மதுரை காமராஜர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைகளில் இருந்து, 500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், பாரதியார் பல்கலை சார்பில் பங்கேற்ற மாணவி பூஜா ஸ்வேதா 'டிராக் சைக்கிளிங்' போட்டியில் வெண்கலம் வென்று பெருமை சேர்த்துள்ளார். மாணவியை, மாவட்ட சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

