தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மோசடி வலையில் சிக்காதீர் மாணவியருக்கு அறிவுரை

மோசடி வலையில் சிக்காதீர் மாணவியருக்கு அறிவுரை

மோசடி வலையில் சிக்காதீர் மாணவியருக்கு அறிவுரை


UPDATED : அக் 16, 2026 05:08 PM

ADDED : அக் 16, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:08 PM ADDED : அக் 16, 2026 05:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார்: ‘மொபைல்போன் பயன்படுத்துவதில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். மோசடி வலையில் சிக்கி கொள்ளாதீர்கள்’ என, மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட போலீஸ் சார்பில், சூலுார் அடுத்த மைக்கேல் ஜாப் மகளிர் கல்லுாரியில், சைபர் கிரைம் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா பேசியதாவது:

மொபைல் போன் பயன்பாடு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. அதற்கேற்ப விதவிதமான மோசடிகளும் இதன் வாயிலாக நடக்கின்றன. கல்வி உதவித்தொகை தருவதாகவும், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியும், கே.ஒய்.சி., விபரங்களை புதுப்பிப்பதாக கூறியும், வேலைவாய்ப்பு தருவதாக கூறியும், பல வித மோசடிகள் நடப்பது சாதாரணமாகி விட்டது. போலியான ஏ.பி.கே., கோப்புகள், போலியான வாடிக்கையாளர் சேவை எண்கள், திருமண இணையதள மோசடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடி, போலி கடன் செயலிகள், டிஜிட்டல் கைது எனும் மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல வகையான மோசடிகள் நடக்கின்றன.

இதிலிருந்து தப்பிக்க, அறிமுகம் இல்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விபரங்கள், ஓ.டி.பி., பின் எண்கள் உட்பட ரகசிய தகவல்களை பகிரக்கூடாது. சந்தேகத்துக்கு உரிய இணைப்புகள், செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்படுவோர், 1930 என்ற எண்ணில் தாமதம் இன்றி தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us