sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிளஸ் 1 ஆங்கில பாட பொதுத்தேர்வு ரொம்ப 'ஈஸி' :தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி

/

பிளஸ் 1 ஆங்கில பாட பொதுத்தேர்வு ரொம்ப 'ஈஸி' :தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 1 ஆங்கில பாட பொதுத்தேர்வு ரொம்ப 'ஈஸி' :தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 1 ஆங்கில பாட பொதுத்தேர்வு ரொம்ப 'ஈஸி' :தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 08, 2024 12:11 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

பிளஸ் 1 ஆங்கிலப் பாட பொதுத்தேர்வு நேற்று நடந்த நிலையில், வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 37 மையங்களில் நடக்கிறது. நேற்று, பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஆங்கிலப் பாட பொதுத்தேர்வு நடந்தது. மொத்தம், 3,845 மாணவர்கள், 4,332 மாணவியர் என, 8,177 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 3,787 மாணவர்கள், 4,282 மாணவியர் என, 8,069 பேர் தேர்வு எழுதினர். 58 மாணவர்கள், 50 மாணவியர் என, 108 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.

தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து வருமாறு:

விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மிருதுபாஷினி: ஆங்கிலத் தேர்வு கடினமாக இருக்குமோ என்று அச்சப்பட்டோம். ஆங்கிலத் தேர்வு மிக எளிமையாக இருந்தது. பாட உள்வினாக்களில் இருந்து கேள்விகள் இடம்பெற்றிருந்தாலும், மிக எளிமையாகவே இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதியுள்ளதால், அதிக மதிப்பெண் கிடைக்கும்.

ரத்தீஷ்: அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன. எளிதில் விடை எழுதும் வகையில் வினாக்கள் அமைந்திருந்ததால் மகிழ்ச்சியாக தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. இலக்கண வினாக்கள் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதற்கான வினாக்களும் மிக எளிமையாக இருந்தது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.

முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்வாதிகா: ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்தபடி மிக எளிதாக இருந்தது. இதேபோல, பிற வினாக்களும் அமைந்திருந்ததால் அனைத்து வினாக்களுக்கும் உரிய நேரத்திற்குள் எளிதாக விடை எழுத முடிந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பிரணவ தர்ஷினி: 'பாராகிராப்' வினாக்களில் எதிர்பார்த்த வினாக்களே இடம்பெற்றிருந்தது. இதனால், அனைத்து வினாக்களுக்கும் சுலபமாக பதில் எழுதினேன். அதிக மதிப்பெண் கிடைக்கும். இதேபோல, பிற பாடங்களுக்கான தேர்வும் எளிதாக அமைந்தால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்.

சூர்யா: 'எரர் ஸபாட்' பகுதி வழக்கம்போல சுலபமாக இல்லை. அடிக்கடி கேட்கக் கூடிய ஒரு சில வினாக்கள் இடம்பெறவில்லை. பிற வினாக்கள் எளிதாக இருந்ததால், விரைந்து பதில் எழுத முடிந்தது. நன்றாக பயிற்சி எடுத்தவர்கள், தேர்வை எளிதாக எதிர்கொண்டனர்.

உடுமலை


உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:

பிராத்தனா ஸ்ரீலட்சுமி: ஆங்கில பாடத்தேர்வு எளிமையாகவே இருந்தது. ஒரு மதிப்பெண் வினா பகுதியில் ஒரு சில வினாக்கள் நேரடியாக இல்லாமல் 'டிவிஸ்ட்டாக' இருந்தது. இருந்தாலும் பதில் எழுதும் வகையில் தான் இருந்தது.

ஜெயசுதா: ஆங்கிலத்தேர்வில் பலமுறை பயிற்சி செய்த வினாக்கள், அதிகம் கேட்கப்பட்டிருந்தன. இதனால், எளிதாக விடை எழுத முடிந்தது. ஒரு சில வினாக்கள் யோசித்து பதில் எழுதும் வகையில் இருந்தது. ஆங்கில பாடத்தேர்வு எளிதாகவே இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும்.

நிரஞ்சனா: ஆங்கில பாடத்தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களில், ஒரு சில வினா கடினமாக இருப்பினும், விடை எழுதும் வகையில் இருந்தது. பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் எளிமையான தேர்வாகவே இருந்தது. இதனால், ஆங்கில பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.

அஸ்வின் கார்த்திகேயன்: பள்ளியிலும், முந்தைய தேர்வு வினாத்தாள்களை கொண்டு பயிற்சி அளித்ததால், தேர்வின் போது சுலபமாக இருந்தது. தேர்வை மகிழ்ச்சியாக எழுதியுள்ளேன். ஆங்கிலத்தேர்வைப்போல் அடுத்துவரும் தேர்வுகளும் எளிமையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

கோகுல்நாத்: பயிற்சி வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதால் ஈஸியாக விடை எழுதிவிட்டோம். ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் நேரடியாக இல்லாமல் குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. மற்ற அனைத்து வினாக்களும் எதிர்பார்த்த வகையில்தான் இருந்தன.






      Dinamalar
      Follow us