/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாய்க்காலில் மிதந்த மாணவர் சடலம் மீட்பு
/
வாய்க்காலில் மிதந்த மாணவர் சடலம் மீட்பு
ADDED : மார் 25, 2025 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் மிதந்த கல்லுாரி மாணவர் சடலம் மீட்கப்பட்டது.
சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் வாலிபர் சடலம் மிதப்பதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் நேற்று கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.
விசாரணையில், சேலம் மேட்டூரை சேர்ந்த செல்வம் மகன் தரணிதரன், 18 என்பதும், பொள்ளாச்சியில் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் எனவும் தெரிந்தது.
சக மாணவர்களுடன் வாய்க்காலில் குளிக்க சென்றபோது, நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது தெரிந்தது.