ADDED : செப் 24, 2026 06:13 PM
காரமடை: காரமடை அருகே உள்ள குட்டையூரில், மேட்டுப்பாளையம் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ரத்ததான முகாம் நடந்தது. 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு ரத்தம் கொண்டு செல்லப்பட்டது.
காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கனகராஜ் கூறுகையில், ‘‘கல்லுாரி மாணவர்களிடம் ரத்ததானம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரத்த தானம் பெறுபவருக்கு மட்டுமன்றி, அதை கொடுப்பவர்களுக்கும் நன்மைகளை உள்ளது. உடலில் உள்ள இரும்பு சத்தின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. ரத்தம் எடுத்த 48 மணி நேரத்திற்குள் உடலில் உள்ள திரவ அளவு சரியாகிவிடுகிறது. எலும்பு மஜ்ஜை துாண்டப்பட்டு, புதிய மற்றும் சுறுசுறுப்பான ரத்த அணுக்கள் வேகமாக உற்பத்தியாகின்றன,’’ என்றார்.
-----
----
