UPDATED : நவ 10, 2026 11:03 AM
ADDED : நவ 10, 2026 10:58 AM

உடுமலை: தென்மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப் போட்டி திருநெல்வேலியில் நடந்தது. இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் திருப்பூர் மாவட்டம் சார்பில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, அறிவியல் மாதிரி உருவாக்கும் போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவன் சரண் முருகேஷ் முதல் பரிசையும், எட்டாம் வகுப்பு மாணவன் ஹரிஷ் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவன் கிருத்திக் ராஜ் போஸ்டர் மேக்கிங் என்ற ஓவியப் போட்டியில் முதல் பரிசையும் பெற்றனர்.
மாணவர்களின் இந்தச் சாதனையைப் பள்ளியின் தலைமையாசிரியர் மாரியப்பன் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர்களான செந்தில்குமார், தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள் ரமேஷ் விஜயராகவன் மற்றும் அறிவியல் ஆசிரியர் சரவணன் ஆகியோர் பாராட்டினர்.
