/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை; 'எமிஸ்' தளத்தில் பதிய உத்தரவு
/
மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை; 'எமிஸ்' தளத்தில் பதிய உத்தரவு
மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை; 'எமிஸ்' தளத்தில் பதிய உத்தரவு
மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை; 'எமிஸ்' தளத்தில் பதிய உத்தரவு
ADDED : செப் 19, 2025 08:47 PM
கோவை; அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், உயர்கல்விக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்கள் குறித்த விவரங்களை, 'எமிஸ்' இணைய தளத்தில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல் வழங்கவும், அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் குறித்த விவரங்களை, ஆசிரியர்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற வேண்டும். இத்தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இனி வரும் காலங்களில் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல் வழங்கப்படும்.
பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் மாணவர்கள் குறித்த விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இப்பணிகளை் அக்., 20க்குள் முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.