/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்
/
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்
ADDED : ஜன 11, 2025 11:14 PM

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லுாரியில், முதல் பட்டமளிப்பு விழா, எஸ்.என்.ஆர்., கலையரங்கத்தில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் ராஜா சபாபதி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளங்கலை இணை மருத்துவ அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றனர். துறைவாரியாக கல்லுாரியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, பதக்கம் வழங்கப்பட்டது.
தலைமை அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், முதல்வர் சத்யா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள்திரளாக பங்கேற்றனர்.