/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் கவுரவிப்பு
/
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் கவுரவிப்பு
ADDED : ஜன 01, 2026 05:14 AM

கோவை: குனியமுத்துார், இடையர்பாளையம் பிரிவில் உள்ள ஆர்.கே.வி. சீனியர் செகண்டரி பள்ளியின் 53வது ஆண்டு விழா விமர்சையாக நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாணவர்களான ட்ரையம்ப் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனர் சுரேஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பள்ளியின் நிறுவனர் தர்மகண்ணன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இக்கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தாளாளர் தர்மகண்ணன் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆடல், பாடல், நடனம் என மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

