/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிழல் இல்லா நாள் மாணவர்கள் பிரமிப்பு
/
நிழல் இல்லா நாள் மாணவர்கள் பிரமிப்பு
ADDED : ஆக 18, 2025 09:35 PM

கோவை; கோவை மணி மேல்நிலைப்பள்ளியில் நேற்று, நிழல் இல்லா நாள் நிகழ்வையொட்டி, மாணவர்கள் செயல் விளக்க நிகழ்ச்சி நடத்தினர்.
சூரியன் தினமும் கிழக்கில் உதித்து, நண்பகலில் மேலே வந்து, மாலையில் மேற்கே மறைகிறது என்பது பொதுவான நிலை.
ஆனால் ஆண்டில் இரண்டு நாட்களில் மட்டும், சூரியன் துல்லியமாக கிழக்கில் உதித்து, மேற்கே மறைகிறது.
அந்த நாட்களில் நண்பகல் உச்சி நேரத்தில், பொருட்களின் நிழலானது அப்பொருளுக்கு கீழே விழுவதால், அதை நம்மால் காண இயலாது. இதுவே நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் எனப்படுகிறது.
இந்த அரிய நிகழ்வு, கோவையில் வருடத்திற்கு இரண்டு முறை, ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்படுகிறது.
நேற்று நண்பகல் 12:17 முதல் 12:23 மணி வரை, மணி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு செயல்விளக்கங்கள் வாயிலாக, நிகழ்வை நேரில் நிகழ்த்தி பிரமித்தனர்.