/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா பதுக்கிய மாணவர்களுக்கு சிறை
/
கஞ்சா பதுக்கிய மாணவர்களுக்கு சிறை
ADDED : டிச 03, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பீளமேடு போலீசார் டைட்டல் பார்க் ரோட்டில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலம் அருகே இடிந்த நிலையில் இருந்த, கட்டடம் அருகே இரு வாலிபர்கள் நின்றிருந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், முறையாக பதில் அளிக்கவில்லை. சோதனையில் அவர்களிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது. அவர்கள் தென்காசி மாவட்டம் குருவி கு ளத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் தயாநிதிமாறன், 18, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த பெத்துராஜ் குமார், 18 என தெரிந்தது. இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

