/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவி மீது தாக்குதல் பாதுகாப்பு கோரி மாணவர்கள் போராட்டம்
/
ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவி மீது தாக்குதல் பாதுகாப்பு கோரி மாணவர்கள் போராட்டம்
ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவி மீது தாக்குதல் பாதுகாப்பு கோரி மாணவர்கள் போராட்டம்
ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவி மீது தாக்குதல் பாதுகாப்பு கோரி மாணவர்கள் போராட்டம்
ADDED : பிப் 25, 2026 06:43 AM

பாலக்காடு: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வினி, 21, கேரள மாநிலம் பாலக்காடு கஞ்சிக்கோடு ஐ.ஐ.டி.,யில் டேட்டா சயின்ஸ் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, அகாடமிக் பிளாக்கிலிருந்து உணவுக்கூடத்திற்கு தோழிகளுடன் அஸ்வினி சென்றார்.
அப்போது, மர்ம நபர் ஒருவரால் அஸ்வினி தாக்கப்பட்டதால் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மயக்கமடைந்த மாணவியை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீட்டு வாளையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அதன்பின், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து கசபா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுஜித் கூறுகையில், ''மாணவியை யார், எதற்காகத் தாக்கினார்கள் என தெரியவில்லை. மரக்கட்டை அல்லது ஏதேனும் ஒரு ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம். வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்,'' என்றார். ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவன வளாகத்திற்குள்ளேயே ஒரு மாணவிக்கு இத்தகைய நிலை ஏற்பட்டது, மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை எனக்கூறி, இரவு நேரத் தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், ஐ.ஐ.டி., அதிகாரிகள் பேச்சு நடத்திய பின், மாணவர்கள் போராட்டத்தை கை விட் டனர்.

