/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் இணைப்பு துண்டிப்பால் இருளில் தவிக்கும் மாணவர்கள்
/
மின் இணைப்பு துண்டிப்பால் இருளில் தவிக்கும் மாணவர்கள்
மின் இணைப்பு துண்டிப்பால் இருளில் தவிக்கும் மாணவர்கள்
மின் இணைப்பு துண்டிப்பால் இருளில் தவிக்கும் மாணவர்கள்
ADDED : பிப் 06, 2025 08:45 PM

வால்பாறை; வால்பாறையில், மின் இணைப்பு துண்டிக்கபட்டதால், பள்ளி மாணவர்கள் இருளில் படிக்கின்றனர்.
வால்பாறை அடுத்துள்ள அய்யர்பாடி எஸ்டேட் ரோப்வே முதல்பிரிவில் உள்ள, அரசு தொடக்கப்பள்ளியில், 13 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஸ்மார்ட் கிளாஸ் வாயிலாகவும், எண்ணும், எழுத்தும் வாயிலாகவும் கல்வி கற்பிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால், மாணவர்கள் இருளில் அமர்ந்து படிக்கின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலாவிடம் கேட்ட போது, ''அரசு தொடக்கப்பள்ளிக்கு, அருகில் உள்ள ரேஷன் கடை மின் இணைப்பு வாயிலாக மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. தற்போது, ரேஷன் கடை இடிக்கப்பட்டதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால், மாணவர்கள் இருளில் அமர்ந்து படிப்பதோடு, ஸ்மார்ட் கிளாஸ் வாயிலாக மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளிக்கு மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.