ADDED : நவ 11, 2026 07:00 PM

அ நிறம் | அளவு
கோவை: பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட(சி–மண்டலம்) கல்லுாரிகளுக்கு இடையே மாணவர்களுக்கான கோ–கோ போட்டிகள் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் இன்று (நவ.,11) நடந்தது.
‘நாக் அவுட்’ முறையிலான போட்டிகளில், வி.எல்.பி. கல்லுாரி 18–3 என்ற புள்ளிகளில் ஏ.ஜே.கே. கல்லுாரியையும், கிருஷ்ணா கல்லுாரி 9–1 புள்ளிகளில் நாராயணகுரு கல்லுாரியையும், ஏ.ஜே.கே. அணி 9–0 புள்ளிகளில் நாராயணகுரு கல்லுாரியையும், வி.எல்.பி. அணி 30–2 புள்ளிகளில் கிருஷ்ணா கல்லுாரியையும் வென்றன.
நிறைவில், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லுாரி, நாராயணகுரு கல்லுாரி ஆகியன முதல் நான்கு இடங்களை வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.
