/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள்; பாட புத்தகங்களை வழங்கி வரவேற்பு
/
விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள்; பாட புத்தகங்களை வழங்கி வரவேற்பு
விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள்; பாட புத்தகங்களை வழங்கி வரவேற்பு
விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள்; பாட புத்தகங்களை வழங்கி வரவேற்பு
ADDED : ஜன 02, 2025 10:09 PM

-- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் அரையாண்டு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரையாண்டுத்தேர்வு கடந்த, 23ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்பட்டன.விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, பள்ளிக்கு மாணவர்கள், உற்சாக வந்தனர்.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பாட நுால்கள் மற்றும் குறிப்பேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பள்ளி மோலண்மை குழு தலைவர் அய்யம்மாள் முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்து, ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கினார். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் அனைவரும், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
* கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
* புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 6, 7 வகுப்புகளுக்கு பாட புத்தகங்கள், மற்றும், 6 முதல், ஒன்பதாம் வகுப்பு முடிய பாடக்குறிப்புகளும் தலைமையாசிரியர் சித்ரா முன்னிலையில் வகுப்பாசிரியர்கள் வழங்கினர்.
வால்பாறை
வால்பாறையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அந்தந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக மூன்றாம் பருவபாடபுத்தகம் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.
வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
வால்பாறை தாலுகாவில் 79 அரசு துவக்கப்பள்ளிகளும், 14 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில், 1,675 மாணவர்கள் படிக்கின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும் நேற்று மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு, கூறினார்.
உடுமலை
உடுமலை சுற்றுப்பகுதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்றாம் வகுப்புக்கான வகுப்புகள் நேற்று துவங்கியது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புத்தாண்டு வாழ்த்து கூறி புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வினியோகித்தனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வியாண்டின் இறுதி பருவத்தில் இருப்பதால், அடிப்படை கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பொதுத்தேர்வு அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவதற்கு, சிறப்பு வகுப்புகளும் தீவிரமாக துவக்கப்பட்டுள்ளது.