/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் ரயில்வே ஸ்டேஷனில் ஆலோசனை குழுவினர் ஆய்வு
/
சூலுார் ரயில்வே ஸ்டேஷனில் ஆலோசனை குழுவினர் ஆய்வு
ADDED : அக் 29, 2024 09:18 PM

சூலுார்: சூலுார் ரயில்வே ஸ்டேஷனில், ஆலோசனை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சூலூர் ரயில்வே ஸ்டேஷன், முத்துக்கவுண்டன் புதூரில் உள்ளது. சென்னை, பெங்களூரு செல்லும் முக்கிய வழித்தடமாக சூலுார் ஸ்டேஷன் உள்ளது. தினமும், 40க்கும் மேற்பட்ட, பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள், சூலூர் ஸ்டேஷனை கடந்து செல்கின்றன.
சூலுார் ரயில்வே ஸ்டேஷன் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ரவிக்குமார், கார்த்திகேயன், சண்முகம், பூங்கொடி ஆகியோர் நேற்று ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டனர்.
பயணிகள் நிற்பதற்கு மேற்கூரை கூட இல்லாமல் உள்ளதும், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரயிலுக்கு காத்திருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டனர். அதில், நாகர்கோவிலிருந்து கோவை செல்லும் ரயில் (எண்: 16321) மாலையில் நிற்பதில்லை எனவும், பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லும் ரயில் (எண்: 16844) காலையில் சூலூர் ஸ்டேஷனில் நின்று செல்வதில்லை, என, பயணிகள் கூறினர். கோவை - சேலம் இடையிலான மெமு ரயில், நான்கு ஆண்டுகளாக இயக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவித்தனர். ஆலோசனை குழுவினர் கூறுகையில், 'சூலுார் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள குறைகளை தீர்க்க, உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளோம்' என்றனர்.