ADDED : செப் 18, 2026 04:41 AM
மதுக்கரை: பாலக்காடு ரோடு மைல்கல் சுகுணாபுரத்திலிருந்து துவங்கும் மேற்கு புறவழிச்சாலையில், குடியிருப்புகள், கல்லுாரிகள், பள்ளிகள் உள்ளன.
மதுக்கரையிலுள்ளகிரஷர், குவாரிகளில் கற்களை உடைத்து அரவை நடக்கும் போது புகைமூட்டத்துடன் கிளம்பும் புழுதி, துகள்கள் மேற்குப்புறவழிச்சாலையில் செல்வோர், குடியிருப்போரை பாதிக்கிறது,என புகார்கள் தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
”சுகுணாபுரத்தில் உள்ள எம்.சாண்ட் தயாரிப்பு, கற்களை உடைக்கும் கிரஷர் குவாரிகளை ஆய்வுக்குட்படுத்தி துாசு வெளியேறுவதை கணக்கிட்டுள்ளோம். தார்ஆலைகளில் வெளியேறும் புகை குறித்தும் ஆய்வு செய்திருக்கிறோம். விதிமுறைகளின் கீழ் செயல்பட அறிவுறுத்தியுள்ளோம்.அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல்காற்றின் தரம் பாதிக்கப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.
