/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல விளையாட்டில் அசத்திய பெண்கள்
/
ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல விளையாட்டில் அசத்திய பெண்கள்
ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல விளையாட்டில் அசத்திய பெண்கள்
ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல விளையாட்டில் அசத்திய பெண்கள்
ADDED : ஏப் 10, 2025 11:22 PM
கோவை; கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக (ஐ.சி.ஏ. ஆர்.,) தென் மண்டல விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த, 8ம் தேதி துவங்கியது; இன்று நிறைவடைகிறது.
நேற்று, பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில், டெல்லி ஐ.ஏ.ஆர்.ஐ., நிறுவனத்தை சேர்ந்த இந்து சோப்ரா, பெங்களூரு ஐ.ஐ.எச்.ஆர்., நிறுவன ரோகிணி, கொச்சி சி.எம்.எப்.ஆர்.ஐ., சைனி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஆண்களுக்கான, 1,500 மீ., ஓட்டத்தில் டெல்லி ஐ.ஆர்.எப்., வீரர் ஆதர்ஷன் படேல், கர்நாடகா டி.சி.ஆர்., வீரர் பிரின்ஸ் குமார், ஹைதராபாத் ஐ.ஐ.ஓ. ஆர்., வீரர் சோகன் வர்மா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
அதேபோல், 200 மீ., பெண்கள் பிரிவில், பெங்களூரு 'நிவேதி' நிறுவன ஆச்சல் பலவேல், ஹைதராபாத் 'கிரிடா' விசா குமாரி, பெங்களூரு ஐ.ஐ.எச்.ஆர்., நிறுவன மீனாட்சி ஆகியோர் முதல் மூன்று இடங்களை தட்டினர்.
பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், காசர்கோடு, சி.பி.சி.ஆர்.ஐ., நிறுவன பிரீத்தி, பெங்களூரு 'அடாரி' நிறுவன சாய் மோனிகா, பெங்களூரு ஐ.ஐ.எச்.ஆர்., நிறுவன குமாரி தர்ஷா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்ற நிலையில் தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.