தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

 சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

 சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா


ADDED : ஜன 24, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 04:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின், 129வது பிறந்த நாள் விழாவையொட்டி, மரக்கன்று மற்றும் அன்னதானம், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்கள், சேலை, வேஷ்டி வழங்கும் விழா, புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது.

பேரவை தலைவர் நடராஜ் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வாசுதேவன், சஞ்சனா ஸ்வஸ்திக் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிர்வாகி கீர்த்திகா முன்னிலை வகித்தார்.

சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, நேதாஜியின் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தி விழாவை துவக்கி வைத்தார். இதில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் வேட்டி, சேலை, பார்வையற்றோர் பயன்படுத்தும் ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

விழாவில், பங்கேற்ற என்.ஜி.எம். கல்லுாரி மாணவியருக்கு, நகராட்சி தலைவர் சியாமளா, மரக்கன்றுகளை வழங்கினார்.கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன், நகராட்சி அரசு நியமன உறுப்பினர் முருகானந்தம், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று பேசினர். இதற்கான ஏற்பாடுகளை, பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us