தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தங்கும் விடுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கணும்! அறிவிப்பு வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்

தங்கும் விடுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கணும்! அறிவிப்பு வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்

தங்கும் விடுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கணும்! அறிவிப்பு வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்


UPDATED : அக் 12, 2026 03:32 AM

ADDED : அக் 11, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 03:32 AM ADDED : அக் 11, 2026 05:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறையில், தங்கும் விடுதிகள், ரிசார்ட் நடத்த அனுமதி சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது; அனுமதி பெறாத விடுதிகளுக்கு 'சீல்' வைக்கப்படும் எனவும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாஸ்தலங்களையடுத்து, கோவை மாவட்டம் வால்பாறைக்கு தான் அதிக அளவில் சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர்.

சுற்றுலாபயணியர் தங்கிச்செல்ல வசதியாக வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறுடேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த மாதம் வால்பாறை மலைப்பகுதியில், விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள பல மாடி கட்டடங்கள் குறித்தும், அவற்றிற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளதா என்பது குறித்தும், கோர்ட் உத்தரவு படி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி சப்- கலெக்டர் ராமகிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

இதனிடையே விதிமுறை மீறல் கட்டங்களுக்கு, உரிய அனுமதி சான்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும், முறையாக லைசென்ஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில், தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஐகோர்ட் உத்தரவால், தங்கும் விடுதி உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் திணறுகின்றனர். இதனிடையே முறையாக அனுமதி பெறாமல் செயல்படும் தங்கும் விடுதிகள் பூட்டி சீல் வைக்கப்படும் எனவும், அதிகாரிகள் ஆய்வின் போது தெரிவித்தனர்.

வனத்துறை, நகராட்சி, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட, 16 துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே, தங்கும் விடுதிகள் செயல்பட வேண்டும் என்ற அதிகாரிகளின் உத்தரவால், தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

முறையாக லைசன்ஸ் பெறணும்



கோவை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் ஜெகதீஸ்வரியிடம் கேட்ட போது, '' சுற்றுலாபயணியர் தங்கி செல்லும் தங்கும் விடுதிகள் அனைத்தும், துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையாக லைசென்ஸ் பெற வேண்டும். அதே போல் குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி வாங்கி, வணிக நோக்கில் செயல்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவுப்படி உரிய ஆவணங்களை நகராட்சி அலுவலகத்தில் முதல் கட்டமாக சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தங்கும்விடுதி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்,'' என்றார்.

ரிசார்ட்களுக்கும் சிக்கல்


வன உயிரினங்கள், சுற்றுச்சூழல்பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வால்பாறை மலைப்பகுதியில் யானைகள் வலசை பாதையில் சட்டவிரோதமாக ரிசார்ட்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. ரிசார்ட்கள் செயல்பட அரசிடம் இருந்து முறையாக அனுமதி பெற வேண்டும்.
தேவையான அனைத்து ஆவணங்களையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ரிசார்ட்கள் தேவையான லைசென்ஸ், அனுமதி பெற்றால் மட்டுமே நடத்த முடியும். அங்கீகரிக்கப்படாத ரிசார்ட்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us