sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : பிப் 10, 2025 10:47 PM

Google News

ADDED : பிப் 10, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 20ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதணை, காலை, 10:30 மணிக்கு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சனையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.

நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமும், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. மாலை, 3:00 மணிக்கு எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலிலிருந்து திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று (11ம் தேதி) காலை, 9:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை தைப்பூச விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us