தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மக்காச்சோள விவசாயிகளுக்கு மானியம்

மக்காச்சோள விவசாயிகளுக்கு மானியம்

மக்காச்சோள விவசாயிகளுக்கு மானியம்


UPDATED : அக் 21, 2026 08:01 PM

ADDED : அக் 21, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 08:01 PM ADDED : அக் 21, 2026 07:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில், தேசிய வளர்ச்சி வேளாண் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், மக்காச் சோளம் செயல்விளக்க திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.11,500 மதிப்புள்ள வேளாண் இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இடுபொருள் தொகுப்பில் வீரிய மக்காச்சோள விதைகள், உயிர் உரங்கள் உள்ளிட்டவை உள்ளன. மேலும், வீரிய ஒட்டுரக விதைகள் 'டிஎச்எம்' 206 வழங்க கிலோவிற்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்.

விவசாயிகள் இத்திட்டத்தில் பயன் பெற, உழவர் செயலியிலோ அல்லது அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அணுக வேண்டும். இடுபொருட்கள் மற்றும் தொழில் நுட்ப அறிவுரைகளை அங்கு பெற்று பயனடைய வேண்டும். மேலும் திட்டம் தொடர்பான விபரங்களுக்கு, அந்தந்த வட்டடார வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us