/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூட்டை துாக்கும் தொழிலாளர்களுக்கு மானியம்; உயர்த்தி வழங்க கோரிக்கை
/
மூட்டை துாக்கும் தொழிலாளர்களுக்கு மானியம்; உயர்த்தி வழங்க கோரிக்கை
மூட்டை துாக்கும் தொழிலாளர்களுக்கு மானியம்; உயர்த்தி வழங்க கோரிக்கை
மூட்டை துாக்கும் தொழிலாளர்களுக்கு மானியம்; உயர்த்தி வழங்க கோரிக்கை
ADDED : அக் 10, 2025 12:11 AM
ஆனைமலை; 'நெல் மூட்டை துாக்கும் தொழிலாளர்களுக்கு, மானியம், 30 ரூபாயாக வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆனைமலை அருகே ஆழியாறு அணை வாயிலாக, பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இரு பருவங்களாக நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பழைய ஆயக்கட்டு கால்வாய் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, அரசு கொள்முதல் மையங்கள் துவங்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கொள்முதல் மையங்களில் நெல் மூட்டை துாக்கும் தொழிலாளர்களுக்கு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் மணிகண்டன் கூறுகையில், ''ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நெல் அறுவடை நடைபெறுகின்றன. தற்போது, கொள்முதல் மையங்களில் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு மானியமாக அரசு, 10 ரூபாய் வழங்குகிறது. மீதம், 20 ரூபாய் விவசாயிகள் வழங்க வேண்டியதுள்ளது.
தற்போது, மூட்டைக்கு 40 ரூபாய் கேட்கின்றனர். அதனா ல், அரசு மானியத்தை 30 ரூபாயாக உயர்த்தி வழங்கினால் அவர்களுக்கு பயனாக இருக்கும். மீதம் உள்ள 10 ரூபாயை விவசாயிகள் தர இயலும். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.