தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாய்வழி எண்டோஸ்கோப்பிக் தைராய்டு சிகிச்சையில் வெற்றி

வாய்வழி எண்டோஸ்கோப்பிக் தைராய்டு சிகிச்சையில் வெற்றி

வாய்வழி எண்டோஸ்கோப்பிக் தைராய்டு சிகிச்சையில் வெற்றி


ADDED : செப் 09, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், 20 வயது இளம் பெண்ணுக்கு வாய் வழி எண்டோஸ்கோப்பிக் தைராய்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. கோவையில் மருத்துவ ரீதியாக பதிவு செய்யப்பட்ட முதல் டி.ஓ.இ.டி.வி.ஏ.,அறுவை சிகிச்சை இது.

டி.ஓ.இ.டி.வி.ஏ., முறையில் வாயின் உட்பகுதியில் சிறிய துளைகள் மூலம் கேமரா மற்றும் நுண்ணிய கருவிகள் செலுத்தி, வெளிப்புற வெட்டு இன்றி தைராய்டு சுரப்பி அகற்றப்படுகிறது. எண்டோஸ்கோப்பியின் பெரிதாக்கப்பட்ட காட்சியால், குரல் நரம்புகள் மற்றும் பாரா தைராய்டு சுரப்பிகளை பாதுகாப்பாக அடையாளம் கண்டு காக்க முடியும்.

மார்பக மற்றும் எண்டோகிரைன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகன்யா சேகர் கூறுகையில், ‘‘நவீன அறுவை சிகிச்சையின் நோக்கம், நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல, நோயாளிக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதும்தான். கழுத்தில் தழும்பு இன்றி பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க முடியும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us