/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைவருக்கும் வீடு திட்டத்தில் மானியம் கிடைக்காமல் தவிப்பு
/
அனைவருக்கும் வீடு திட்டத்தில் மானியம் கிடைக்காமல் தவிப்பு
அனைவருக்கும் வீடு திட்டத்தில் மானியம் கிடைக்காமல் தவிப்பு
அனைவருக்கும் வீடு திட்டத்தில் மானியம் கிடைக்காமல் தவிப்பு
ADDED : நவ 04, 2025 09:10 PM
கோவை: கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சொந்த இடம் வைத்திருப்பவர்கள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் அரசு மானியம் ரூ.2.50 லட்சம் பெற்று சொந்த வீடு கட்ட விரும்பினால், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன்னதாக, பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மானியமாக ரூ.2.10 லட்சம் நான்கு தவணைகளாக வழங்கப்பட்டது.
அத்திட்டத்தில், மதுக்கரை பேரூராட்சியாக இருந்தபோது விண்ணப்பித்த பயனாளிகளில் சிலருக்கு இன்னும் தவணை தொகை முழுமையாக வழங்கப்படவில்லை.
பேரூராட்சியாக இருந்த மதுக்கரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், தவணை நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் பயனாளிகள் விசாரித்தபோது, செல்வபுரத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு இத்திட்டம் மாற்றப்பட்டு விட்டது; அங்கு சென்று மீதத்தவணை பெற்றுக் கொள்ளுங்கள்' என அலுவலர்கள் கூறியுள்ளனர்.
வாரிய அலுவலகத்தில் விசாரித்தபோது, 'காரமடை, கருமத்தம்பட்டி நகராட்சிகளில் இருந்து மட்டுமே பயனாளிகள் பட்டியல் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. மதுக்கரை நகராட்சியின் பட்டியல் வழங்கப்படவில்லை.
மதுக்கரையில் மொத்தம் எத்தனை பயனாளிகள், அவர்களில் எத்தனை பேருக்கு எத்தனை தவணை மானியம் வழங்கப்பட்டுள்ளது; இன்னும் எத்தனை தவணை வழங்க வேண்டும் என்கிற அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால், தவணை தொகை விடுவிக்கவில்லை' என்றனர்.
பயனாளிகள் பட்டியல் கேட்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இருந்து மதுக்கரை நகராட்சிக்கு பலமுறை கடிதம் எழுதியும், கிடப்பில் போடப்பட்டு இருப்பதால், தவணை தொகை கிடைக்காமல் பயனாளிகள் அவதிப்படுகின்றனர்.

