/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் தற்கொலை
/
மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் தற்கொலை
ADDED : டிச 18, 2024 10:51 PM
தொண்டாமுத்தூர்; நரசீபுரத்தில், மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால், கூலித்தொழிலாளி மனவிரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நரசீபுரம், தர்மராஜா கோவில் வீதியைச் சேர்ந்தவர் முருகேசன், 53. கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். முருகேசன், பல ஆண்டுகளாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்.
இதன் காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும், மதுப்பழக்கத்தை கைவிட முடியாததால், மனவிரக்தி அடைந்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.