/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவி மீது தாக்குதல்சூலூர் போலீசார் விசாரணை
/
பள்ளி மாணவி மீது தாக்குதல்சூலூர் போலீசார் விசாரணை
பள்ளி மாணவி மீது தாக்குதல்சூலூர் போலீசார் விசாரணை
பள்ளி மாணவி மீது தாக்குதல்சூலூர் போலீசார் விசாரணை
ADDED : மார் 20, 2026 04:45 AM

கோவை: தவறாக நடந்த மாணவன் மீது புகார் கொடுத்த பள்ளி மாணவியை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூலுார் பகுதி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்1 படிக்கும் மாணவி, சக மாணவன் செயல்பாடு குறித்து ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால், மாணவி மீது மாணவன் கோபத்தில் இருந்துள்ளார்.
பள்ளி முடிந்து மாணவி பீடம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். மாணவன் தன் குடும்பத்தினருடன் அங்கு வந்து தகராறு செய்தனர். மாணவியை அழைத்து செல்ல வந்த தாய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மாணவியின் தாத்தாவும் கண்டித்தார்.மூவரையும் மாணவன் குடும்பத்தினர் அடித்து உதைத்தனர்.
மூவரும், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கலெக்டர் அலுவலகத்திலும் பல்வேறு அமைப்பினர் புகார் அளித்தனர். இதையடுத்து சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.சி., எஸ்.டி. ஆணைய உறுப்பினர் செல்வகுமார் மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் விசாரித்தார்.

