/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலுடன் சாரல்மழை பொழிவு: தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
/
வெயிலுடன் சாரல்மழை பொழிவு: தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
வெயிலுடன் சாரல்மழை பொழிவு: தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
வெயிலுடன் சாரல்மழை பொழிவு: தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
ADDED : செப் 29, 2025 10:12 PM

வால்பாறை:
வால்பாறையில் தேயிலை மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்களில் மொத்தம், 32 ஆயிரத்து 825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. இதில், தேயிலை மட்டும், 25 ஆயிரத்து, 253 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
இங்குள்ள, சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில் மொத்தம், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களாக வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்வதால், தேயிலை செடிகள் துளிர்விட முடியாத நிலை ஏற்பட்டது. தேயிலை உற்பத்தி பாதிக்கபட்டதோடு, தற்காலிக தொழிலாளர்களும் வேலையிழந்தனர்.
இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மழைப்பொழிவு குறைந்து இடையிடையே வெயிலுடன் கூடிய சாரல்மழை பெய்கிறது. இதனால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் சாரல்மழை பெய்து வருவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளது. தேயிலை செடிக்கு தேவையான வெப்பம் மற்றும் மிதமான மழையும் உள்ளதால், தேயிலை செடிகள் நீண்ட இடைவெளிக்கு பின் பசுமையாக காட்சியளிக்கிறது.
இதே போன்று சீதோஷ்ண நிலை நிலவினால், அக்டோபர் முதல் மே மாதம் வரை தேயிலை உற்பத்தி பரவலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு, கூறினர்.