/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருச்செந்தில் கோட்டத்தில் நவ., 2ல் சூர சம்ஹார விழா
/
திருச்செந்தில் கோட்டத்தில் நவ., 2ல் சூர சம்ஹார விழா
திருச்செந்தில் கோட்டத்தில் நவ., 2ல் சூர சம்ஹார விழா
திருச்செந்தில் கோட்டத்தில் நவ., 2ல் சூர சம்ஹார விழா
ADDED : அக் 17, 2024 11:37 PM
கோவை : ஈச்சனாரி திருச்செந்தில் கோட்டத்தில், சூர சம்ஹார பெருவிழா வரும் 2ம் தேதி துவங்குகிறது.
கோவை, ஈச்சனாரி திருச்செந்தில் கோட்டத்தில், கச்சியப்பர் மடாலய அறக்கட்டளை சார்பில், 47ம் ஆண்டு, மகா கந்த சஷ்டி சூரசம்ஹாரப்பெருவிழா நவ., 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
நவ., 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. 7ம் தேதி காலை 7:00 மணிக்கு, மகா அபிஷேகம், தொடர்ந்து சத்ரு சம்ஹார யாகம், மதியம் 12:00 மணிக்கு மகா அலங்கார பூஜை நடத்தப்படுகிறது. மாலை 4:00 மணிக்கு, சூரசம்ஹார பெருவிழா நடக்கிறது.
இதில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், மலுமிச்சம்பட்டி நாகசக்தி பீடம் சிவ சண்முகசுந்தர் பாபுஜி சுவாமிகள் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி தலைமை வகிக்கின்றனர்.8ம் தேதி மகா அலங்கார பூஜை, அன்னதானம், 9ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.