ADDED : ஆக 23, 2026 02:50 PM
அ நிறம் | அளவு
பேரூர், ஆக. 24-
சிறுவாணி ரோடு, மருதமலை ரோடு ஆகிய பகுதிகளில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி, பிளாஸ்டர் ஆப் பாரிஸ்-ல் அலங்கார பொருட்கள், சுவாமி சிலைகள் தயாரித்து விற்கின்றனர்.
விநாயகர் சதுர்த்திக்காக 4 இன்ச் முதல் 3 அடி வரையிலான பிள்ளையார் சிலைகளை தயாரித்து விற்கின்றனர். இஷ்டத்துக்கு விதம் விதமான கலரில் பெயின்ட் அடிப்பதால் சிலைகள் ஜொலிக்கின்றன. பலரும் மொத்தமாக வாங்கி, வெவ்வேறு இடங்களில் விற்கின்றனர்.
சூழல் மாசு பற்றி கேட்டால் அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. நாங்கள் தயாரிக்கிறோம்; மக்கள் வாங்குகிறார்கள்; இதில் அரசுக்கு என்ன வேலை என்று ஆச்சரியம் காட்டுகின்றனர்.
