ADDED : செப் 20, 2026 09:24 PM
ஆர்.எஸ்.புரம்: கோவை பாரதீய வித்யா பவனின் ‘சரணாகதி’ என்னும், விசாகா ஹரியின் சங்கீத உபன்யாச நிகழ்ச்சி நேற்று நடந்தது. 500க்கு மேற்பட்ட இசைப்பிரியர்கள் நிகழ்ச்சியை ரசித்தனர்.
நிகழ்ச்சி குறித்து பாரதிய வித்யாபவன் தலைவர் நாகசுப்ரமணியம் கூறியதாவது:
சரணாகதி என்பது சனாதன தர்மத்தில் ஒரு உயர்ந்த தத்துவமாக கருதப்படுகிறது. இது பக்தியின் உயர்நிலை. இதை ஹிந்து மத நுால்கள் மிகவும் போற்றிக் கூறியுள்ளன. ராமாயணத்தின் விபீஷண சரணாகதியும், மஹாபாரதத்தின் திரவுபதி சரணாகதியும் இதற்கு சான்றாகும். அர்ஜுனனின் சரணாகதி உலகிற்கு பகவத்கீதையை வழங்கியதை நாம் மறக்கமுடியாது. ஸ்ரீமதி விசாகா ஹரி இவற்றில் உள்ள ஆழமான தத்துவங்களையும், உண்மைகளையும் அவருக்கே உரித்தான பாணியில், இசையுடன் கலந்து தருகிறார். இதை பக்தியுடன் கேட்பது நம் ஆன்மாவுக்கு உயர்வைத்தரும். மனதுக்கு நிம்மதியை தரும். இவ்வாறு, அவர் கூறினார்.
