/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கூடைப்பந்து போட்டியில் எஸ்.வி.ஜி.வி.,மாணவியர் முதலிடம்
/
தேசிய கூடைப்பந்து போட்டியில் எஸ்.வி.ஜி.வி.,மாணவியர் முதலிடம்
தேசிய கூடைப்பந்து போட்டியில் எஸ்.வி.ஜி.வி.,மாணவியர் முதலிடம்
தேசிய கூடைப்பந்து போட்டியில் எஸ்.வி.ஜி.வி.,மாணவியர் முதலிடம்
ADDED : ஜன 06, 2025 01:56 AM

மேட்டுப்பாளையம்; தேசிய அளவில் நடந்த கூடைப்பந்து போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற மாணவிகளுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான, 49வது கூடைப்பந்து போட்டி, ஐதராபாத்தில் நடந்தது.
13 வயதிற்கு உட்பட்ட சப் ஜூனியர் பிரிவு தமிழ்நாடு அணியில், காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் சுவாதிகா, கீர்த்தனா ஆகிய இரண்டு மாணவிகள் விளையாடினர். இப்பள்ளி விளையாட்டு ஆசிரியர் மாரியப்பன், தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
ஐதராபாத்தில் நடந்த போட்டியில், தமிழக அணி வெற்றி பெற்று, முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றது. இந்த அணிக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது.
சிறந்த விளையாட்டு வீராங்கனையாக, எஸ்.வி.ஜி.வி., பள்ளி மாணவி சுவாதிகா தேர்வு பெற்றார். இவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தேசிய அளவில் நடந்த போட்டியில், வெற்றி பெற்ற மாணவிகள் இருவர் மற்றும் விளையாட்டு ஆசிரியர் மாரியப்பன், பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கப்பட்டனர். விழாவுக்கு, பள்ளி தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார். முதல்வர் சசிகலா வரவேற்றார்.