/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்வச்சதா ஹி சேவா' சைக்கிள் ஊர்வலம்
/
'ஸ்வச்சதா ஹி சேவா' சைக்கிள் ஊர்வலம்
ADDED : செப் 30, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை தபால் கோட்டம் சார்பில், மத்திய அரசின் 'ஸ்வட்ச் பாரத்' திட்டத்தில், 'ஸ்வச்சதா ஹி சேவா-2025' குறித்த சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் எதிரே தபால்காரர்கள், 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஊர்வலத்தை, போஸ்ட் மாஸ்டர் மாணிக்கம் துவக்கி வைத்தார்.
துாய்மை பாரதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தபால்காரர்கள் தங்களது சைக்கிள்களில் 'ஸ்வட்ச் பாரத்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிரசாரம் செய்தனர்.