sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சுவாமி கவுதமானந்தர் இன்று வருகை

/

 சுவாமி கவுதமானந்தர் இன்று வருகை

 சுவாமி கவுதமானந்தர் இன்று வருகை

 சுவாமி கவுதமானந்தர் இன்று வருகை


ADDED : பிப் 28, 2026 07:04 AM

Google News

ADDED : பிப் 28, 2026 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் இயக்கத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தர், ஆன்மிக சுற்றுப்பயணமாக, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்திற்கு இன்று வருகிறார்.

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் இயக்கம், உலகமெங்கும், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்கள் கிளைகளை நிறுவி, ஆயிரக்கணக்கான துறவிகள் வாயிலாக, கல்வி, மருத்துவம், பேரிடர் நிவாரணம் உட்பட அத்தியாவசிய சேவைகளை, மக்களுக்கு மேற்கொண்டு வருகிறது.

இதன் உலகளாவிய தலைவராக சுவாமி கவுதமானந்தர் உள்ளார். இவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்துக்கு, இன்று வருகிறார்.

இன்று மதியம் பெரியநாயக்கன்பாளையம் வரும் இவர், மார்ச் 4ம் தேதி வரை வித்யாலயத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். மார்ச் 1 காலை மாற்றுத்திறனாளிகளுக்கான மராத்தான் போட்டியை தொடக்கி வைக்கிறார்.

2ம் தேதி வித்யாலயா வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நட்சத்திர வனத்தையும் திறந்து வைக்க உள்ளார். மாலை 6:00 மணியளவில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் உள்ள ராமகிருஷ்ணர் கோவிலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

தினமும் மாலை 5:00 மணி அளவில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இவரது வருகையை ஒட்டி, ராமகிருஷ்ண இயக்கத்தின் மூத்த துறவிகளும், கோவை வந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us