sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோணிப்பையில் 'ஸ்வெட்டர்' மாணவர்கள் வடிவமைப்பு

/

 கோணிப்பையில் 'ஸ்வெட்டர்' மாணவர்கள் வடிவமைப்பு

 கோணிப்பையில் 'ஸ்வெட்டர்' மாணவர்கள் வடிவமைப்பு

 கோணிப்பையில் 'ஸ்வெட்டர்' மாணவர்கள் வடிவமைப்பு


ADDED : பிப் 12, 2026 05:19 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -:

முதலிபாளையம், 'நிப்ட் - டீ' கல்லுாரி மாணவர்கள், கோணிப்பையை பயன்படுத்தி குளிர்காலத்தில் அணியக்கூடிய 'ஸ்வெட்டர்' வடிவமைத்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

ஆயத்த ஆடை டிசைனிங் முதலாம் ஆண்டு படிக்கும், மாதேஷ் கார்த்தி, நவீனா, கனிஷ்கா, ஹேமா ஆகியோர், ஆடை வடிவமைப்பு துறை ஆசிரியர் பூபதி விஜய் மேற்பார்வையில், இத்தகைய புதுமையான குளிராடையை உருவாக்கியுள்ளனர்.

நடுங்க செய்யும் குளிரை கட்டுப்படுத்த, 'ஸ்வெட்டர்' போன்ற ஆடைகளை அணிவது, சில நேரங்களில் அவசியமாகிறது.

ஏழைகளுக்கு, குளிராடைகள் எட்டாக்கனியாக உள்ள நிலையில், அவர்களுக்கும் பயன்படும் வகையிலும், சமூக அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கில், சணல் நுாலிழையில் தயாரான கோணிப்பையை ஆடையாக்கும் முயற்சி பாராட்டப்பட்டுள்ளது.

கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நீடித்த பயன்பாட்டிற்கு ஏற்ற கோணிப்பையைத் தேர்வு செய்துள்ளனர். சணல் இழைகளால் தயாரிக்கப்படும் கோணிப்பை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. அதனுடன் பூ வேலைப்பாடுகளை இணைத்து கண்ணைக் கவரும் அழகிய குளிராடைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us