தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் இருதயவியல் மருத்துவ கருத்தரங்கு

கோவையில் இருதயவியல் மருத்துவ கருத்தரங்கு

கோவையில் இருதயவியல் மருத்துவ கருத்தரங்கு


ADDED : செப் 27, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: நீலாம்பூர் லீ மெரிடியன் ஓட்டலில், கார்டியாலாஜிக்கல் சொசைட்டி ஆப் கோயம்புத்தூர் சார்பில் நடந்த ‘சிஎஸ்சிசிகான் 2026’ கருத்தரங்கில், பல மாவட்டங்களை சேர்ந்த டாக்டர்கள், மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள், முதுநிலை மருத்துவம் படிப்போர் பங்கேற்றனர்.

கருத்தரங்கு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் சர்வேஷ்வரன் கூறுகையில், ‘‘இருதய அறுவை சிகிச்சையில் புதிய பல மாற்றங்கள் வந்துள்ளன. கடினமான சூழ்நிலையில் விரைந்து செயல்பட்டு முதலுதவி, சிகிச்சை அளிப்பதில் மருத்துவ தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது,’’ என்றார்.

கருத்தரங்கையொட்டி முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு எக்கோ கார்டியோகிராம் நேரடி செயல் விளக்கம் நடந்தது. சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், உதவிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

டாக்டர் பாலசுந்தரம், டாக்டர் பழனிசாமி ஆகியோருக்கு ‘ஐகான் ஆப் தி இயர்’ விருதுகள் வழங்கப்பட்டன. கோவை டாக்டர்கள் மகேஷ்வரன், பாண்டியன் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

கருத்தரங்கு ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் மோன் மணி நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us