ADDED : ஜூன் 20, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை மலைப்பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆழியாறிலிருந்து வால்பாறை வரை, 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் விபத்தை தவிர்க்க, ரோலக்ஸ் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சில நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்படுகிறது. கொண்டைஊசி வளைவுகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை உயர்த்தி கட்டினால், விபத்தை தவிர்க்க முடியும்.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'மலைப்பாதையில் விபத்து தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் ஏற்கனவே உள்ள தடுப்புச்சுவர்களை உயர்த்தி கட்ட வேண்டும்,' என்றனர்.
