ADDED : பிப் 01, 2024 10:56 PM
பெ.நா.பாளையம்;துடியலூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், பிப்., 6ம் தேதி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், நாராயணசாமி நாயுடு,100வது பிறந்தநாள் விழா பேரணி மற்றும் மாநாடு நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் தலைமை வகிக்கிறார். பேரணியை ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் சங்கத் தலைவர் வெள்ளிங்கிரி துவக்கி வைக்கிறார். மாநாட்டில் விவசாயிகள் அனைத்து கடனுக்கும் தள்ளுபடிகள் இறக்க அனுமதி, விவசாய நிலம் பாதுகாப்பு, பால் மற்றும் உற்பத்திபொருளுக்கு உரிய விலை உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளோடு, யானை, காட்டுப்பன்றி, மயில், மான், குரங்கு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக விவசாயிகள் சங்கம் செய்து வருகிறது.

