/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை பால பிரச்னைக்கு பிரதமரிடம் புகார் விசாரணை அதிகாரி நியமித்தது தமிழக அரசு
/
கோவை பால பிரச்னைக்கு பிரதமரிடம் புகார் விசாரணை அதிகாரி நியமித்தது தமிழக அரசு
கோவை பால பிரச்னைக்கு பிரதமரிடம் புகார் விசாரணை அதிகாரி நியமித்தது தமிழக அரசு
கோவை பால பிரச்னைக்கு பிரதமரிடம் புகார் விசாரணை அதிகாரி நியமித்தது தமிழக அரசு
ADDED : அக் 26, 2025 01:54 AM

கோவை: கோவை, பெரிய நாயக்கன்பாளையத்தில், ஐ.ஆர்.சி., விதிமுறைகளுக்கு மாறாக, தவறான வடிவமைப்புடன் மேம்பாலம் கட்டியிருப்பது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு புகார் சென்றதன் எதிரொலியாக, 45 நாட்களுக்குள் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, ஐ.ஏ.எஸ். அதிகாரி பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில், ராமகிருஷ்ணா வித்யாலயா சந்திப்பில் இருந்து வண்ணான்கோவில் சந்திப்பை இணைக்கும் வகையில், 1.85 கி.மீ.,க்கு 115 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சா லைத்துறை மேம்பாலம் கட்டியது.
இ ப்பாலம், 2023 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வந்தது. பிரதமர் மோடி, டில்லியில் இருந்து வீடியோ கான்பரன்சில் திறந்து வைத்தார். இப்பாலத்தில், மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் இறங்கு தளமும், சர்வீஸ் காலையும் 'ஜீரோ' பாயின்ட்டில் இணைகிறது.
அவ்விடத்தில் உள்ள கட்டடத்தில் நான்கு கடைகள் செயல்படுகின்றன. அந்நிலத்தை கையகப் படுத்தாமல், மேம்பாலம் அமைத்திருப்பதால் வாகனங்கள் விபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது.
இப்பிரச்னை மத்திய அரசி ன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், சர்வீஸ் சாலை மற்றும் இறங்கு தளம் இணையும் இடத்தில் உள்ள கட்டடங்களை அகற்றி, நிலத்தை கையகப்படுத்தி, வடி வமைப்பு குறைபாடுகளுக்கு தீர்வு காண, 7.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
மத் திய அரசு நிதி ஒதுக்கி பல மாதங்களாகியும் இன்னும் தீர்வு காணப்படாததால், இப்பிரச்னைகளை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு, கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் கடிதம் எழுதினார். இக்கடிதம் மீது மேல் நடவடிக்கை எடுக்க, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும், தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விசாரிக்க, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், விசாரணை நடத்தி, 45 வேலை நாட்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

