/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக அரசின் பம்ப் கொள்முதலில்..முன்னுரிமை . குறு, சிறு தொழில் துறை எதிர்பார்ப்பு
/
தமிழக அரசின் பம்ப் கொள்முதலில்..முன்னுரிமை . குறு, சிறு தொழில் துறை எதிர்பார்ப்பு
தமிழக அரசின் பம்ப் கொள்முதலில்..முன்னுரிமை . குறு, சிறு தொழில் துறை எதிர்பார்ப்பு
தமிழக அரசின் பம்ப் கொள்முதலில்..முன்னுரிமை . குறு, சிறு தொழில் துறை எதிர்பார்ப்பு
ADDED : பிப் 16, 2026 06:10 AM

கோவை :மூலப்பொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், கோவை குறு, சிறு பம்ப் உற்பத்தியாளர்கள் தடுமாறி வருகின்றனர். பம்ப் தொழிலைக் காக்க அரசின் உதவிக் கரத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:
பம்ப்செட் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளோம். தமிழக அரசு, குடிநீர் வழங்கல் துறைவாயிலாக, மோட்டார் பம்ப்செட்களை கொள்முதல் செய்கிறது. இவற்றில் 75 சதவீதத்தை குறு, சிறு நிறுவனங்களிடம் வாங்க உத்தரவிட வேண்டும்.
மூலப்பொருட்களின் விலை, செயற்கையாக 200 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. இதைத் தவிர்க்க கோவையில் மூலப்பொருள் கிடங்கு அமைக்க வேண்டும். தொழிற்சாலை கட்டட வரி, சொத்து வரி, மின்கட்டண உயர்வு குறுந்தொழில்முனைவோரை பாதிக்கிறது. இவற்றைக் குறைக்க வேண்டும்.
தறிப்பட்டறைகளுக்கு வழங்கப்படுவது போல, 10 ஹெச்.பி., வரை மின்சாரம் பயன்படுத்தும் லேத் பட்டறைகளுக்கும் மானிய விலை மின்சாரம் வழங்க வேண்டும்.
கோவையில், ஐ.எஸ்.ஐ., முத்திரை பெறுவதற்கான இலவச பரிசோதனைக் கூடத்தை தமிழக அரசே நிறுவ வேண்டும். இதை 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தி.மு.க. வாக்குறுதியாக அளித்தது.
ஜி.எஸ்.டி. பறக்கும்படையினர் ஆய்வு என்ற பெயரில், சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி, பல்லாயிரக்கணக்கில் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதனால், 1.5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களும் பயன் அடைவர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

