/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக - கேரள வனத்துறையினர் வனப்பகுதியில் கூட்டு ஆய்வு
/
தமிழக - கேரள வனத்துறையினர் வனப்பகுதியில் கூட்டு ஆய்வு
தமிழக - கேரள வனத்துறையினர் வனப்பகுதியில் கூட்டு ஆய்வு
தமிழக - கேரள வனத்துறையினர் வனப்பகுதியில் கூட்டு ஆய்வு
ADDED : பிப் 11, 2025 11:36 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, தமிழக - கேரள வனத்துறையினர் இணைந்து வனப்பகுதியில், கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில், வனச்சரகர் ஞானவேல்பாலமுருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள், கேரளா வனத்துறையினர் இணைந்து ரோந்து சென்றனர்.
தேக்கடி முதல் போத்தமடை பீட் வரை, 17 கி.மீ., துாரத்துக்கு வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் துப்பாக்கியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இருமாநில வனத்துறை அதிகாரிகள், மாதத்தில் நான்கு முறை கூட்டு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். வனப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களை பாதுகாக்கும் வகையில் இந்த ரோந்து செல்லப்படுகிறது. மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.