/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகள் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது தமிழ்நாடு உளவியல் சங்கம் வலியுறுத்தல்

ADDED : அக் 04, 2025 11:37 PM
கோவை:கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி, 10 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான விவகாரத்தில், தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையமும், மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும், குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என, தேர்தல் ஆணையம் ஏற்கனவே அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பொது நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பான இடங்களை அமைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவசர உளவியல் உதவி வழங்க வேண்டும், பெற்றோருக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என, தமிழ்நாடு உளவியல் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் தலைவர் பாலமுருகன் கூறுகையில், “குழந்தைகளை பாதுகாப்பது, பெற்றோரின் முக்கிய கடமை. தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தேர்தல் பிரசார கூட்டங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால், பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.