/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்நாடு கோ-கோ அணி தேர்வு; வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்
/
தமிழ்நாடு கோ-கோ அணி தேர்வு; வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்
தமிழ்நாடு கோ-கோ அணி தேர்வு; வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்
தமிழ்நாடு கோ-கோ அணி தேர்வு; வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்
ADDED : செப் 25, 2024 09:00 PM
கோவை : ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு கோ-கோ அணி வீராங்கனைகளுக்கான பயிற்சி, 13 நாட்கள் கோவையில் வழங்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், 34வது சப் ஜூனியர் மாணவ, மாணவியருக்கான கோ-கோ போட்டிகள் வரும், 28 முதல் அக்., 2ம் தேதி வரை நடக்கிறது. இதற்கென, தமிழ்நாடு மாநில கோ-கோ கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் சப் ஜூனியர் மாணவ, மாணவியருக்கான தேர்வு நடந்தது.
கோவை மாவட்ட கோ-கோ கழகத்திடம், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு கோ-கோ அணி வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம், கோவை ஆதித்யா குளோபல் பள்ளியில் கடந்த, 13 முதல் நேற்று வரை நடந்தது.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 12 மாணவியர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கோ-கோ அணிக்கு பள்ளி தாளாளர் பிரவீன் குமார், முதல்வர் விஜய பிரபா ஆகியோர் சீருடை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.